பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு யார் முன்னேற்றம்!

by Editor / 12-06-2021 07:29:03am
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு யார் முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் - ஜோகோவிச் மோதுகின்றனர்.

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் , 3 வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். முன்னணி வீரர்களான இருவரும் மோதிக் கொண்ட இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் முதல் வெற்றி நடால் 6-3 என்ற கணக்கில் கைப்பற்ற, இதனை சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் 2வது மற்றும் 3 வது சுற்றில் 6-3 , 7-6என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்ததாக 4 வது சுற்றிலும் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற ,பரபரப்பாக நடந்த போட்டியில் இறுதியாக நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை இந்த போட்டி நடந்தது. இதன்மூலம் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 6 வது முறையாக முன்னேறியுள்ளார்.

 

Tags :

Share via