பள்ளி வாகன விபத்து - உதவியாளர் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தின் அருகில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளம் மற்றும் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. ,இதில் வாகனத்தில் உதவியாளராக இருந்த டி. கரிசல்பட்டியைச் சேர்ந்த போதராஜ் என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ,மேலும் இந்த விபத்தில் ஒரு மாணவன் மாணவி என இருவர் சிறுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல் நிலைய காவலர் போதராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :