தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை

by Staff / 21-04-2023 02:09:39pm
தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவதற்கான சட்டம் முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்ய உள்ளார்.இந்த சட்ட மசோதாவின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதனை திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் கணேசன் "சில ஐடி நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலைக்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. மற்றபடி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நேரம் 8 மணி நேரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த மசோதாவால் பல தனியார் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்வதை மறைமுகமாக கட்டாயமாக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவிற்கு பல தனியார் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via