முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்;
மதுரை திருமால்புரத்தில் கல்குவாரியை அகற்ற கோரி காலையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் நடைப்பெற்ற தர்ணா போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் கல்குவாரியை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடுவதாக கூறினர்.இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரிடம் தொடர்ந்து டிஆர்ஓ அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இரவு 8மணியை கடந்தும் போராட்டம் தொடர்கிறதுமதுரை அருகே கல்குவாரி தற்காலிக மூடல் என்ற அறிவிப்பை வெளியிடும் வரை மண்டபத்தை விட்டு போக மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்; நள்ளிரவு வரை நீடித்து வருகிறது.
Tags : முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம்;



















