இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மறைவுக்கு முதல்வர் இரங்கல்
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் (83) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது முன்மாதிரியான தலைமையும், நமது தேசத்தின் பாதுகாப்பிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :