ஆன்லைன் ரம்மி: தொடரும் தற்கொலை

சென்னை போரூரை சேர்ந்தவர் பிரபு (39). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து இவர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலை இழந்து, வீட்டிலேயே இருந்துள்ளார். இவருடைய மனைவி ஜனனியும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி, படுக்கையறையில் பிரபு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதையடுத்து ஜனனி போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது தெரியவந்துள்ளது. தன்னிடம் இருந்த கிரெடிட் கார்ட் மூலம் ஆன்லைன் ரம்மியில் ஆடி வந்த அவர், ரூ.15 லட்சம் வரை அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கடனை அடைக்க வங்கி நிர்வாகம் பிரபுவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அவர் தற்கொலை செய்துள்ளார்.
Tags :