எதிர்பார்ப்பை கிளப்பும் ஸ்மார்ட்போன்

by Staff / 30-11-2022 04:54:58pm
எதிர்பார்ப்பை கிளப்பும் ஸ்மார்ட்போன்

ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 13 சீரிஸ் ஸ்மார்ப்டோனை வரும் டிசம்பர் 1 பீஜிங்கியில் வெளியிடவுள்ளது. இந்த பொன் எம்.ஐ.யு.ஐ 14 மற்றும் ஜியோமி பட்ஸ் 4 ஆகியவற்றுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமி 13 சீரிஸில் நோட் 13 மற்றும் நோட் 13 ப்ரோ பிரீமியம் வெர்ஷன் ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.

ரெட்மி நோட் 13 மற்றும் 13 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் எம்.ஐ.யு.ஐ 14 உடன் ஓஎஸ் 13 ஆகியவற்றை கொண்டிருக்கும். இதன்மூலம் ஸ்மார்ட்போன் அம்சங்களை பயனர்கள் தங்களுக்கு வேண்டியதுபோல மாற்றிக்கொள்ள முடியும். இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் குவாட்காம் ஸ்நேப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவை இடம்பெறவுள்ளது.

ஜியோமி 13ல் 6.2 இன்ச் ஆமோலெட் டிஸ்பிளேவும், ஜியோமி 13 ப்ரோவில் 6.7 இன்ச் LTPO E6 AMOLED டிப்ஸ்பிளேவுடன் 2கே ரெஷலியூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கிடைக்கும்.

ஜியோமி 12 ப்ரோவில் 3 ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. 50எம்பி சோனி IMX989 சென்சார், 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் மர்றும் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெறுகிறது.இத்துடன் 4800mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்படவுள்ளது.

 

Tags :

Share via
Logo