பத்திரிக்கையாளர் ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது.
கரூர் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக பலியாயினர்.இந்த மரணங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியதாக எழுந்த புகாரில் பத்திரிக்கையாளர் ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய புகாரில் நேற்று (செப்.29) மூன்று பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் வதந்தி பரப்புவோர் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
Tags : பத்திரிக்கையாளர் ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது.


















