நாளை NEET - UG தேர்வு தேர்வு எழுத செல்லும் குழந்தைகளுக்கு சில முக்கிய குறிப்புகள்.
2024 - 2025 ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் விசில் செய்திகளின் அன்பான வாழ்த்துக்கள்.
நாளை முற்பகல் தேர்வு மையத்திற்கு செல்லும் முன் (வீட்டிலேயே) உங்கள் NEET Application ல் பயன்படுத்திய அதே கலர் போட்டோவை உங்களுடைய அனுமதி சீட்டில் Admit Card-ல் ஒட்ட வேண்டும். (முதல் பக்கம் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இரண்டாவது பக்கம் அஞ்சல் அட்டை 6 x 4 அளவுள்ள ஃபோட்டோ)
உங்கள் இடது கை பெருவிரல் ரேகை பதிவு அவசியம். கூடுதலாக Passport Size ல் அதே Colour Photo வை 2 Copy கைவசம் எடுத்து செல்லவும்.
(தேர்வறையில்) நீங்கள் உங்களுடைய அனுமதி சீட்டில் ஒட்டும் போட்டோவில் இடது புறம் நீங்கள் கையொப்பமிட வேண்டும். அதே போன்று அறை கண்காணிப்பாளர் உங்கள் போட்டோவின் வலது புறம் கையெழுத்திடுவார்.
தேர்வு முடிந்த பிறகு கண்டிப்பாக நுழைவுச்சீட்டை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு திரும்ப வேண்டும். அப்பொழுது தான் உங்களது விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
Tags : நாளை NEET - UG தேர்வு தேர்வு எழுத செல்லும் குழந்தைகளுக்கு சில முக்கிய குறிப்புகள்.



















