சென்னையில் தோண்டும் சாலைகளை உடனே சீர்செய்யுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 10-05-2023 04:25:36pm
சென்னையில் தோண்டும் சாலைகளை உடனே சீர்செய்யுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோண்டப்படும் சாலைகளை உடனடியாக சீர்செய்யுங்கள் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.சென்னையில் பல்வேறு இடங்களில் மோசமான சாலைகள் உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பணி முன்னேற்றத்தில் பிரச்னை இருந்தால் தலைமைச் செயலாளர் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 

Tags :

Share via

More stories