பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய லாரிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்.

by Staff / 21-12-2022 01:22:23pm
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய லாரிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்.

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் ,கண்ணுபொத்தை உள்ளிட்ட பகுதியில் உள்ள 4 வழிசாலையோரம் கோழி இறைச்சி கழிவு மற்றும் பிளாஸ்டிக்கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு கழிவுகளை கொட்டுபவர்களை கையும் களவுமாக பிடித்து பேரூராட்சி நிர்வாகம் பலமுறை அபராதமும் விதித்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் அவ்வப்போது கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு முப்பந்தல் கண்ணுபொத்தை பகுதியிலுள்ள 4 வழிசாலையோரம் ஒரு வாரியில் இருந்து பிளாஸ்டிக்கழிவுகள் கொட்டுவதை அந்த வழியாக சென்ற பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்தார். உடனே அவர் அதை தடுத்து நிறுத்தி லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக்கழிவுகள் நாகர்கோவில் பகுதியில் இருந்து கொண்டுவந்தது தெரியவந்தது. இதனைய டுத்து கழிவுகளை கொட்டியதற்காக பேரூராட்சி சார்பில் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டிய கழிவுகள் மீண்டும் அதே லாரியில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via