விழுப்புரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ்.

"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக விழுப்புரம் தனியார் தங்கும் விடுதியில் கரும்பு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரவாழியம்மன் ஆலயத்திலிருந்து (சிக்னல்) நான்கு முனை சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தினார். அதன் பின்னர் விழுப்புரம் சிக்னல் நான்கு முனை சந்திப்பில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம்உரையாற்றினார்
இதன் காரணமாக விழுப்புரம் போலீசார் சென்னை புறவழி சாலையிலிருந்து சிக்னல் வழியாக பேருந்து நிலையம் வரும் வாகனங்களை புறவழிச் சாலையிலேயே திருப்பி அனுப்பி எலிச்சித்திரம் சாலை வழியாக பேருந்து நிலையம் வரும் வகையில் மாற்றி அனுப்பப்பட்டது. அதேபோல் திருச்சியில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சிக்னல் வழியாக சென்னை புறவழிச் சாலை செல்லும் பேருந்துகளையும் எல்லிசத்திரம் சாலை வழியாக திருப்பி மீண்டும் புறவழிச் சாலை வழியாகவே மாற்றி அனுப்பப்பட்டது
Tags : EPS started its tour in Villupuram.