மதுரை - புனலூர் விரைவு ரயில் 8 நாட்கள் ரத்து

by Editor / 19-09-2022 08:37:16pm
மதுரை - புனலூர் விரைவு ரயில் 8 நாட்கள் ரத்து

நாகர்கோவில் - இரணியல் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக சிறிய உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 22, 26, 29 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பர் 20, 23, 27, 30 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நடைபெறாததால் செப்டம்பர் 19 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மற்றும் செப்டம்பர் 20 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் (16730) ஆகியவை மட்டும் வழக்கம் போல் இயங்கும்.

 

Tags :

Share via