மத்திய அரசு சிபிஎஸ் இ தேர்வு குளறுபடி காரணமாக அதன் தலைவர் செயலாளர் இருவரையும் மாற்றும் செய்து உத்தரவு
மத்திய அரசு சிபிஎஸ் இ தேர்வு குளறுபடி காரணமாக அதன் தலைவர் செயலாளர் இருவரையும் மாற்றும் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சி பி எஸ் இ தலைவர் ராகுல் சிங் செயலாளர் ஹிமான் சுகுப்தா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக லோகாண்டே பிரசாந்த் சீதாராம் செயலாளராக வருண் பரத்வாஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன ர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய கணினி மதிப்பீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப குளறுபடி காரணமாக புகார்கள் எழுந்தன .அதன் காரணமாக சைபர் குழு தவறு நடந்ததை கண்டறிந்து சொல்லப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்தது. திட்டத்திற்கான டெண்டர் மற்றும் சேவைகளை பெற்றதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக எஸ். ராதா சவுக்கான் செயல்படுவார் என்றும் இக்குழு தனது விரிவான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையிடம்டம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Tags :



















