மிதக்கும் வீடுகளைக் கண்டுபிடித்துள்ள ஜப்பான் நிறுவனம்
ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ மிதக்கும் வீட்டை உருவாக்கியுள்ளது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. வீட்டின் அமைப்பு தனித்துவமானது என அந்நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இந்த வீடு நீர்ப்புகா தன்மை கொண்டது. தண்ணீர் அளவு அதிகரித்தவுடன், வீடு மிதக்கத் தொடங்குமாம்.“வீடு சாதாரண வீடு போல் தெரிகிறது, ஆனால் அதைச் சுற்றி தண்ணீர் நிரம்பத் தொடங்கியதும், வீடு மெதுவாக தரையை விட்டு மேலே உயரத் தொடங்கும். வீடு தடிமனான இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இது தடிமனான கேபிள்களால் தரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளம் ஏற்படும் போது வீட்டை மேல்நோக்கி விடுவித்து, வெள்ளம் முடிந்தவுடன் அதை மீண்டும் தரையில் இணைக்கிறது. தண்ணீர் குறைந்தால் வீடு தரையைத் தொடும். தண்ணீர் வராத வகையில் மேல்நோக்கி மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடு 5 மீட்டர் உயரத்தில் மிதக்கும். அதாவது 15 அடி உயர வெள்ளத்திலும் வீடு மிதக்கும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜப்பான் நீண்ட காலமாக நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெருமழை மற்றும் சூறாவளி காரணமாக பெரும் வெள்ளத்தையும் அனுபவிக்கிறது. இது அழிவு மற்றும் உயிர் இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதை எதிர்கொள்ள ஏதுவாக உயிர் மற்றும் பொருள் இழப்புகளை தவிர்க்க இப்படியான வீட்டை உருவாக்கியுள்ளது இச்சிஜோ கோமுடென் நிறுவனம்.
Tags :