தண்ணீர் பஞ்சம் 5 ஸ்டார் சவர் பார்டி - கொந்தளிக்கும் பெங்களூரு

by Staff / 13-03-2024 04:54:56pm
 தண்ணீர் பஞ்சம் 5 ஸ்டார் சவர் பார்டி - கொந்தளிக்கும் பெங்களூரு

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன.ஹோலி பண்டிக்கை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களில், ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்" என அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் பங்கேற்க சிறார்களுக்கு ரூ.99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 10 பேர் கொண்ட குழு ரூ.2999 கொடுத்து இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது பெங்களூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories