தவறான பேட்டிகளை கொடுத்து திமுக அரசை கொச்சைப்படுத்த வேண்டாம் தமிழிசைக்கு ஆர். எஸ். பாரதி

by Staff / 12-09-2023 03:32:18pm
தவறான பேட்டிகளை கொடுத்து திமுக அரசை கொச்சைப்படுத்த வேண்டாம் தமிழிசைக்கு  ஆர். எஸ். பாரதி

தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் ஆளுநர் தமிழிசை ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழகத்தில் தக்க வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி மீது தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை!? தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை வம்புக்கு இழுத்து, “பாரதியாருக்கு மரியாதை செலுத்தத் தமிழக முதல்வருக்கு நேரமில்லையா” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு நிற்கவில்லை அவர். “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழக முதல்வருக்கு” என்று கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் கைகுலுக்கிய இடம், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், அந்த ஆட்சியின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியும், ஏன், ஒன்றிய அமைச்சர்களும், “சாதனை” என்று பக்கத்துக்குப் பக்கம் - தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி விளம்பரம், பேட்டிகள் வாயிலாகப் பெருமைப்படுத்திக் கொண்ட ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில்தான்

 

Tags :

Share via