ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பாக முடியாது - குஷ்பு

by Staff / 12-09-2023 03:43:13pm
ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பாக முடியாது - குஷ்பு

சென்னையில் உள்ள இசிஆர் சாலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதி முழுக்க கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம், ஏ.ஆர்.ரஹ்மானை இதற்கு பொறுப்பாக்க முடியாது. எப்போதும் அவருக்கு உறுதுணையாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo