267 கிலோ தங்கம் கடத்தல் - சிக்கிய பாஜக பிரமுகர்

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜக பிரமுகர் பிருத்வியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் 77 லட்சம் ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்த ஆவணத்தை காட்டி பிருத்வியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வித் வேதா நிறுவனம் ஷபீர் அலிக்கு கடை ஒதுக்கியதில் பிருத்விக்கும் முக்கிய பங்கு உள்ளதாக சுங்கத்துறைக்கு சந்தேகம் எழுந்த நிலையில் இந்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :