முதல்வரின் நடவடிக்கைகளை கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கண்டன் ஆர்ப்பாட்டம்.

by Editor / 04-09-2024 03:53:19pm
முதல்வரின் நடவடிக்கைகளை கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கண்டன் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை நகரின் புறவழிச் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹரிஹரன் என்பவர் முதல்வராக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் ஹரிஹரன் கல்லூரி முதல்வராக பணியில் சேர்ந்ததிலிருந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என யாரிடமும் இணக்கமாக நடந்து கொள்ளாமல் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என மருத்துவர்கள் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களை முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் ஹரிஹரன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துறை தலைவர்களாக இருந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கதை கண்டித்தும், மருத்துவர்களுடன் இணக்கமாக இல்லை என்றும், மருத்துவர்களின் அடிப்படைத் தேவைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், குறிப்பாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் மருத்துவர்கள் இல்லாத போது அறையின் பூட்டை உடைத்து சோதனை செய்வதாகவும், மருத்துவர்கள் அறையில் உள்ள போது சென்று சோதனை செய்யாமல் இது போன்ற நிகழ்வுகளில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஈடுபட்டு வருவதால் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என அனைவரிடமும் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags : முதல்வரின் நடவடிக்கைகளை கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கண்டன் ஆர்ப்பாட்டம்.

Share via