by Staff /
08-07-2023
02:56:55pm
ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து, பர்கூர் அருகே உள்ள சுண்டப்பூருக்கு, எம்சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு, மினி லாரி ஒன்று மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.செட்டிநொடி என்ற இடத்தில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக, இடது பக்கம் திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மலை சரிவில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் டிரைவர் கெஞ்சன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, மலை சரிவில் கவிழ்ந்த மினி லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :
Share via