விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு

by Staff / 08-07-2023 03:04:46pm
விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருவது தான் இன்றைய நிலைமை. என தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளரிடம் தெரிவித்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்து அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னத்துரை, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் தளைவாய் சுந்தரம், கடம்பூர் ராஜு, செல்லப்பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை ராஜா, அதிமுக நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, செந்தில் ஆறுமுகம், சுதா பரமசிவம், சங்கரலிங்கம், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் சால்வை பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் யு. எஸ். சேகர், நடராஜன், கே. ஜெ. பிரபாகரன், பில்லா விக்னேஷ், ஜெ. ஜெ. தனராஜ், வழக்கறிஞர் சரவணன், மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி பகுதி கழகச் செயலாளர் ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், பகுதி இளைஞரணி திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செண்பகசெல்வன், செல்லப்பா, சேம்ராஜ், சகாயராஜ் யுவன் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தமிழக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளரிடம் பேசும்போது அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம். கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு ஆறுமாத காலம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது அப்படி மன அழுத்தம் இருக்கும் நபருக்கு ஏன் பணி சுமை வழங்கினர் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி அதனால் இன்று இழப்பு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் இன்று காவலர் மன அழுத்த பயிற்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. என தகவல் வந்துள்ளது. என்றார் மேலும் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொண்டார். மகளிர் உரிமைத்தொகை என்பது நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகமாக உள்ளது வரட்டும் பாப்போம். என்றார். அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. ஆகஸ்ட் 20-பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கின்றது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகின்றதோ அப்போதெல்லாம் விலை உயர்வு 70-சதவீதம் உயர்வது வழக்கம். அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவம் நடைபெறுகிறது. சளிக்கு ஊசி போட போனால் நாய்கடிக்கு ஊசி போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வெளியே வருகிறார்கள் ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கை இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் கையுடன் திரும்புவார்கள் என தெரிவித்தார்
 

Tags :

Share via