ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இந்து கோவில் மீது தாக்குதல்

by Staff / 17-07-2023 01:06:04pm
ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இந்து கோவில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது சில ஆசாமிகள் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தினர். எனினும், ராக்கெட்டுகள் வெடிக்காததால் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் கோவில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 9 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இந்து சமூகத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர்.

 

Tags :

Share via

More stories