18.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

by Editor / 26-06-2021 09:20:04am
18.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.11 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 181,175,561 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 165,761,282 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,924,972 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,489,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via