காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனத்தில் ரூ.18.5 கோடி மோசடி
பழனி அருகேயுள்ள தாழையூத்து பகுதியில் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பிரபல முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் இருந்து, கோல்டு வின்னர், ஸ்ரீகோல்டு, எல்டியா தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் பழனியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கரண்குமார் ஆகியோர் உதவி மேலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
பல ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் நிறுவனம் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பொய்யான கணக்கு காட்டி வந்துள்ளனர்.
மேலும் சமையல் எண்ணையை வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இதுவரை சுமார் 18.5 கோடி ரூபாய் மதிப்பிலான 1. 600 டன் எண்ணெயை திருடி மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்து அதிர்ந்து போன காளீஸ்வரி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :


















.jpg)
