தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

by Staff / 27-06-2024 01:45:00pm
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஜூன் மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு ரயில் சேவை பயணிகள் வசதிக்காக ஜூலை மாதம் மூன்றாம் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜூலை 4 முதல் ஜூலை 20 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜூலை 5 முதல் ஜூலை 21 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via