பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் "ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்"

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் அவரது ஆதரவாளர்கள் "ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்" ஒன்றை தொடங்கியுள்ளனர். இது குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அண்ணாமலையை "அரசியல் சூப்பர் ஸ்டார்" என்றும், "மக்கள் தலைவர்" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்க ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டிருப்பது அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் "ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்"