70வது பிறந்தநாள்: அண்ணா,கருணாநிதி, நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

by Editor / 01-03-2023 09:10:09am
70வது பிறந்தநாள்: அண்ணா,கருணாநிதி, நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள், பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் “மார்ச் 1 திராவிட பொன்நாள்”, “முயற்சி முயற்சி முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடம், கீழ்ப்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப்பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் பிறந்த நாட்களில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெறுவது போன்று முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பிறந்த நாளிலும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் மாலை 5 மணிக்கு அரசியல் கட்சித்தலைவர்கள்,காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via