சீரியல் நடிகையை கடித்த தெருநாய்கள்

by Staff / 16-09-2022 01:19:43pm
சீரியல் நடிகையை கடித்த தெருநாய்கள்

தெருநாய்களுக்கு உணவளிக்க வந்த மலையாள சீரியல் நடிகையை நாய் ஒன்று கடித்துக்குதறியது.
தொலைக்காட்சி தொடர் நடிகையும், அகில இந்திய வானொலி மையத்தின் தொகுப்பாளருமான பரதனூர் கொச்சுவயல் பகுதியைச் சேர்ந்த சாந்தா (64) என்பவரை தெருநாய் ஒன்று கடித்தது. வியாழக்கிழமை மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

தெருநாய்களுக்கு சாந்தா தனது வீட்டில் உணவு சமைத்து, கொண்டு வந்து அப்பகுதியில் உள்ள சந்திப்பில் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று அவரை கையில் கடித்தது.

வலது கையில் காயமடைந்த சாந்தா திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடித்தது வெறிநாயாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

 

Tags :

Share via
Logo