வங்கி ATM உடைத்து கொள்ளை முயற்சி

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் ஜமீன்கோடம்பட்டி கிளை கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியை ஒட்டி கனரா வங்கி ATM இயந்திரமும் உள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு ATM மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.அப்போது முகம் தெரியாமல் இருக்கும் வகையில் முகமூடி அணிந்து கையில் கட்டையுடன் வந்த கொள்ளையன் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளான்
இயந்திரத்தில் இருந்து அலாரம் ஒலி வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர் காவல் நிலைய போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :