மதுவில் விஷம் அருந்தி இறப்பிலும் பிரியாத நண்பர்கள் மரணம்

by Editor / 16-09-2022 09:57:12am
மதுவில் விஷம் அருந்தி இறப்பிலும் பிரியாத நண்பர்கள் மரணம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கருப்பர் கோவில் பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மதியரசன் (வயது 25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வெள்ளைக்கண்ணு (வயது 26) இருவரும் நெருங்கிய உறவின்ர். மேலும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்தவர்கள்.

இதில் வெள்ளக்கண்ணு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். வெள்ளைக்கண்ணு மூத்த பெண் குழந்தையை தனது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் வெள்ளைக்கண்ணு நண்பன் மதியரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்து கருப்பு கோவிலில் பட்டி கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.திருமணமாகாத மதியரசன் தனது தாயுடன் தினந்தோறும் குடிபோதையில் வந்து சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளக்கண்ணும் மதியரசனும் மதுவில் நெல்பயிருக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்து உள்ளனர்.இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via