செஸ் விளையாட்டுக்கெனசிறப்பு அகாடமி உருவாக்கப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். .

by Editor / 17-12-2024 09:39:28pm
செஸ் விளையாட்டுக்கெனசிறப்பு அகாடமி உருவாக்கப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். .

தமிழ்நாடு அரசின் ஆதரவில்லாமல் எனது வெற்றி சாத்தியமாகி இருக்காது என உலக செஸ் சாம்பியன் குகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றிய குகேஷ், "சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நடைபெறவில்லை என்றால் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வாகியிருக்க முடியாது. கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வானதால் தான் உலக சாம்பியனாக முடிந்தது. அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய முதல்வர் தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென 'HOME OF CHESS' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கான பாராட்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், "குகேஷின் வெற்றி கொடுக்கக்கூடிய நம்பிக்கை, தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Tags : செஸ் விளையாட்டுக்கெனசிறப்பு அகாடமி உருவாக்கப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

Share via