விஜய்க்கு வலுக்கும் கண்டனம்.

by Editor / 28-12-2024 08:15:37pm
விஜய்க்கு வலுக்கும் கண்டனம்.

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் நினைவு தின விழாவில் பங்கேற்காக தவெக தலைவர் விஜய்க்கு இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. விஜயகாந்த்தின் முதலாமாண்டு நினைவு தின விழாவில் கலந்து கொள்ள, எல்.கே.சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், விழாவில் விஜயின் சார்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, "ஏற்றிவிட்டவரை விஜய் மறந்துவிட்டார்" என நெட்டீசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Tags : விஜய்க்கு வலுக்கும் கண்டனம்.

Share via