அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

by Staff / 16-05-2023 12:32:33pm
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. செந்தில் பாலாஜி மீதான சம்மன் ரத்துக்கு எதிரான, அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இந்த சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்சநீதிமன்றம் மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2ஆம் தேதி தள்ளி வைத்திருந்தது.

 

Tags :

Share via