கழிவுமூடைகளை விதைத்து சென்ற வாகனம் பறிமுதல்-ஓட்டுநர் கைது.

தமிழக - கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக அண்டை மாநில கழிவு பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 25 ஆம் தேதி மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் ஊராட்சி பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு அதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அவைகள் மருத்துவ கழிவுகள் இல்லை என்றும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூட்டைகளை கொட்டிச்சென்ற லாரி குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இலத்தூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் கதிரணாபெட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. சரவணன் லாரியை இயக்கி வந்த நிலையில் இலத்தூர் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளை தூக்கி எறிந்ததுள்ளார். மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் இதேபோன்று பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதனை தூக்கி எறிந்த காரணத்தை மேற்கோள் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ச்சியாக சரவணனை கைது செய்து அவர் இயக்கி வந்த லாரியை கைப்பற்றி இலத்தூர் போலீசார் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
Tags : கழிவுமூடைகளை விதைத்து சென்ற வாகனம் பறிமுதல்-ஓட்டுநர் கைது.