திருநெல்வேலி -  மேட்டுப் பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ஏப்ரல் 10 காலை 8 மணிக்கு முன்பதிவுதுவங்குகிறது.

by Editor / 09-04-2025 10:14:58pm
திருநெல்வேலி -  மேட்டுப் பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ஏப்ரல் 10 காலை 8 மணிக்கு முன்பதிவுதுவங்குகிறது.

திருநெல்வேலி ,சேரன்மகாதேவி,அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி,தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை  மேலும் ஒரு மாதத்திற்கு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஏப்ரல் 13, 20, 27 மற்றும் மே 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஏப்ரல் 14, 21, 28 மற்றும் மே 5 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

 

Tags : திருநெல்வேலி -  மேட்டுப் பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.

Share via