தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள்

தங்கம் எப்பொழுதும் இந்திய மக்களின் அதீத ஆசையின் வெளிப்பாடாகஇருந்து வருகிறது.,. அதனால் ,அதைச்சேர்ப்பதில் அதிக ஆர்வமும்சிரத்தையும் எடுத்துக்கொள்கின்றனர். ஏதாவது ஒரு சூழலில் பண முடக்கம் ஏற்பட்டால் சட்டென்று மாற்றி மறித்து பணத்தை திரட்டுவதற்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கை கொடுக்கிறது. தங்கத்தின் சிறப்பை உணர்ந்த பல அரசுகள் தம் நாட்டின் பெருமையை பறைசாற்ற ..தங்க காசு, தங்க வராகன்களை புழக்கத்தில் விட்டது. வசதிபடைத்த வீடுகளில் பொழுது போக்கும் பல்லாங்குழி பலகைகள் தங்கத்தில் செய்ததும் அரசர்கள் சிம்மாசனம் ,செங்கோல்முதலியவை தங்கத்தில் செய்ததும் தங்கத்தின் சிறப்பையும் உணர்த்தும் . இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது இந்தியாவிற்கு வராமலேயே ..இந்தியாவைப்பற்றி எழுதிய காரல் மார்க்ஸ் இந்தியர்கள் அம்மணமாக இருந்தாலும் இருப்பார்களே தவிர ஒரு பொட்டு தங்கம் கூட அணியாமல் இருக்கமாட்டார்கள் என்று ...அதனால்தான் அதைமஞ்சள் பிசாசு என்று பெய ர்சூட்டி அழைத்தார். அத்தகைய எண்ணம் இந்தியர்களிடமிருந்து மாறாதிருப்பதற்கு சமூக மதிப்பீடுகளே காரணம். கழுத்து நிறைய தொங்க ..தொங்க நகை போட்டு அகல பட்டை போட்ட பட்டுப்புடவை கட்டிவிழாவுக்கோ..விருந்துக்கோ சென்றால் ..அந்த பெண்ணுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் உபசரிப்பும் உச்சத்தில்..வெறும் மஞ்சள் கயிறோடு பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் அவமரியாதை. சொல்லி மாளாது .அதனால் தான் ஏழைப் பெண்ணுக்குக் கூட கடனை வாங்கியாவது இரண்டு மூன்று பவுன் போட்டேனும் திருமணம்செய்து வைக்கின்றனர்.தங்க நகை பெண்ணுக்குரிய சொத்தாக ...அவளுக்குப்பிறந்த வீட்டுச்சொத்தாகக் கொடுக்கப்பட்டது.அன்று பெண்ணுக்கு வேறு அசையா சொத்துக்களில் உரிமை இல்லாதிருந்தது
[தொடரும்]
Tags :