72 மணி நேரம் கை குலுக்கி தாய், மகள் சாதனை
கரூரில் தொடர்ந்து, 72 மணி நேரம் கைகுலுக்கி தாயும், மகளும் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.கரூரை சேர்ந்தவர் பத்மாவதி, 40; டெக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீதர்ஷினி, 18; தனியார் பள்ளி மாணவி. இருவரும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற, 72 மணி நேரம் தொடர்ந்து கைகுலுக்கும் நிகழ்ச்சியை கடந்த, 22ல் கரூர் நகரத்தார் சங்க திருமண மண்டபத்தில் தொடங்கினர். நேற்று காலை, 11:03 மணிக்கு, 72 மணி நேரம் தொடர்ந்து கைகுலுக்கி சாதனை படைத்து, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம் பிடித்தனர். இதையடுத்து, நடுவர்கள் ஹரீஷ், தினேஷ் குமார் ஆகியோர், ஆசியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றுகளை வழங்கினர். முந்தைய சாதனை, 43 மணி நேரமாக இருந்தது.
Tags :