500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

by Staff / 30-11-2022 02:27:08pm
 500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரண்டு தொழிற்சாலைகளில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஏடிஎஸ் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். ரூ. 500 கோடி மதிப்புள்ள திட மற்றும் திரவ போதை மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மூலப்பொருள் அகமதாபாத், மும்பை மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை மூலப்பொருளை மாத்திரை வடிவில் விற்பனை செய்யத் தயாரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் தொடர்பான முழு விவரங்களையும் பெற முயற்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories