ட்விட்டரின் 3700 ஊழியர்களை நீக்கப்போகும் எலான் மஸ்க்

ட்விட்டரை கைப்பற்றிய கோடீஸ்வரர் எலான் மஸ்க், விரைவில் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மஸ்க் தனது தொழிலாளர்களில் 50 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் நாளை ஊழியர்களுக்கு அறிவிப்பார். மஸ்க் நிறுவனம் தற்போதுள்ள வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :