பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு நிதி முறைகேடுலஞ்ச ஒழிப்பு துறையினர்சோதனை
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதிகளவில் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.இதில் பேரூராட்சி கணினி இயக்குநர் தயாநிதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் வெங்கடாசலம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி விடிய விடிய நடைபெற்ற சோதனையில் 25 ஆயிரம் ரூபாய் ஆயிரம் பணம் பெற்றது சம்பந்தமாக சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பாக காவலர் வெங்கடாசலம் வாயை திறக்காமல் உள்ளதால் தருமபுரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ய உள்ளதாகவும் காவலர் வெங்கடாசலத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
Tags : பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு நிதி முறைகேடுலஞ்ச ஒழிப்பு துறையினர்சோதனை