திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு  தெரிவித்தார்.

by Editor / 06-09-2024 04:17:31pm
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு  தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை  எடுக்க காரணமாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா தலைமை காவலர் அய்யப்பன், முதல் நிலை காவலர் சரவண சேகர், இரண்டாம் நிலை காவலர் மலர்மன்னன் ஆகியோரையும்,ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடந்த 2010- ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர் படுத்தி எதிரிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் கிடைக்க காரணமாக இருந்த  தலைமை காவலர்கள் கோபால், பத்மாவதி ஆகியோர்களை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்ததை  பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

 

Tags : திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு  தெரிவித்தார்.

Share via