ஏழை வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி

அயோத்தி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு மீரா மாஞ்சி என்பவரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற அவர், மீரா மாஞ்சி வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை பதிவிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளிதான் இந்த மீரா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் . ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேநீரை ருசித்த பிரதமர் மோடி சர்க்கரை அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags :