சென்னை, கீழக்கரையில் 3 பேரை பிடித்து விசாரணை

by Staff / 06-03-2024 05:22:45pm
சென்னை, கீழக்கரையில் 3 பேரை பிடித்து விசாரணை


இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு நிதி அனுப்பியது மற்றும் ஆட்கள் சேர்த்தது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் உட்பட 8 பேர் மீது கடந்த ஜனவரியில் என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த பலர் அல்கொய்தா அமைப்புகளுக்கு நேரடியாக நிதி அனுப்பியதும், வேலை இல்லாத இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்த்து தீவிரவாத செயல்களில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக நிதி அனுப்பியது மற்றும் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரு சிறையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி, நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை ஏழுகிணறு பிடாரியார் கோவில் தெருவில் தங்கி இருந்த ஹாசன் அலி(27) என்பவரின் வீட்டில் நேற்று காலை 6. 30 மணி முதல் பிற்பகல் வரை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

Tags :

Share via