மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வருகிற 12 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.உணவகம், பேக்கரி, தேனீர் கடைகள் இரவு 9 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான தடை தொடர்கிறது.மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி இல்லை.தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
