தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்பு.

by Editor / 22-03-2025 10:54:51am
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்பு.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்  கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்பு 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்பு.ந்திய ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று கூடி உள்ளோம்,
கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது,அனைத்து தரப்பு மக்களும் போராடியதால் தான் சுதந்திரம் கிடைத்தது.தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும்,தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது
மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம்.-முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுதொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியான தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் பொழிப்பெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெயர்ப்பலகைகளும் அவரவர் மொழிகளிலேயே வைக்க ஏற்பாடு.

 

Tags : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது.

Share via