கருப்பு கொடி கட்டி பாஜகவினர் போராட்டம்.

by Editor / 22-03-2025 10:50:27am
கருப்பு கொடி கட்டி பாஜகவினர் போராட்டம்.

தமிழகத்தில் மது கடைகளை ஒழிக்க வேண்டும்,பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து பாஜக சார்பில் இன்று பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் இல்லங்களில் கருப்பு  கொடி கட்டி போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்,கன்னியாகுமரி , மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் படுகொலை பாலியல் குற்றங்கள் அதிக அளவில் தொடர்வதாகவும் அதனை மடைமாற்ற தொகுதி சீரமைப்பு என்ற விவகாரத்தை முதலமைச்சர் கையில் எடுத்து உள்ளதாக குற்றம் சாட்டி போராட்டம். இதேபோல் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் அவரது கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

 

Tags : கருப்பு கொடி கட்டி பாஜகவினர் போராட்டம்.

Share via