ஓ பி.எஸ்.மண்ணில் மாஸ்காட்டும் இ .பி.எஸ்.அணியினர் 

by Editor / 23-01-2023 08:25:29am
ஓ பி.எஸ்.மண்ணில் மாஸ்காட்டும் இ .பி.எஸ்.அணியினர் 

முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி தேனிமாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று வருகிறார்.
 முதல் நிகழ்ச்சியான தேனி பகுதியில் உள்ள திண்டுக்கல் டூ குமுளி பைபாஸ் சாலையில் பிரம்மாண்டமான வரவேற்பை அதிமுக எடப்பாடி ஆதரவாளர்கள் அளிக்க உள்ளனர்.மேலும் இந்த வரவேற்ப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர்  கம்பத்தில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல  திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரம்மாண்டமான மேடையில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்க கேரளா சென்டைமேளங்கள்,கரகாட்டம்,தப்பாட்டம்,தேவராட்டம்,உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சாலையில் திரளான மக்கள் வரவேற்ப்பு அளிக்க காலைமுதலே அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். ஓ பி.எஸ்.மண்ணில் மாஸ்காட்ட இ .பி.எஸ்.அணியினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாகவே பேசப்படுகிறது. 

ஓ பி.எஸ்.மண்ணில் மாஸ்காட்டும் இ .பி.எஸ்.அணியினர் 
 

Tags :

Share via

More stories

Logo