அமெரிக்க இராணுவம் ஈரானின் கெஷ்ம் தீவின் மீது புதிய தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க கடல் சார் முற்றுகையை மீறி ஈரான் நோக்கி சென்ற இலட்சி என்ற ஸ்போர்ட்ஸ்னா கொடியேந்திய எண்ணெய்க் கப்பலின் மீது அமெரிக்க ராணுவம் ஹெல்ப் பயர் ஏவுககணையை வீசி அதை செயல் இழக்க செய்துள்ளது. இதனால் ஹார்மோஸ் நீரிணையில் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் தரை கட்டுப்பாட்டு மையத் தொடர்பு கோபுரத்தை இலக்காக வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதலை கொடுத்தது. இதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அமெரிக்கா மேற்கொண்டுள்ள அத்துமீறல் நடவடிக்கை என்று குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு எதிர் நிலையில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது தலைமையகம் அமைந்துள்ள பக்ரைனின் விமான படைத்தளத்தின் மீது ஆளில்லா வான்வழி ரோல்களை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரானால் செலுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து நடுவானிலே சுற்றி விரட்டி வீழ்த்தப்பட்டன என்று அமெரிக்க அதன் நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன. தொடர் பேச்சுவார்த்தைகளில் தோல்வி ஏற்பட்டதை ஈரான் தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்பட்டாலும் அமெரிக்கா தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் போர் பதட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.. தொடரும் முற்றுகையால், சுமார் 20,000 சர்வதேச மாலுமிகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர். டிரம்ப் நிர்வாகத்தின் ராஜதந்திரத் தலையீட்டையும் மீறி, இஸ்ரேல் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியது , இது மிகவும் பலவீனமான ஒரு பகுதி நேர போர்நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
Tags :



















