வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த த. வெ.க. நிர்வாகி இருவர் கைது..

by Admin / 03-06-2026 02:08:58am
 வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த த. வெ.க. நிர்வாகி இருவர் கைது..

 வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி இருவர் கைது.

தூத்துக்குடி ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தமிழக வெற்றி கழகம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார் ஜெயபால் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி இவர்கள் இருவரும் சிறுவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று காரில் வைத்து இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கம் அடைந்த இளம் பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிறுவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சிக்கு அவர் ஏற்படுத்தியதாக கூறி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தமிழக வெற்றி கழகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

 வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த த. வெ.க. நிர்வாகி இருவர் கைது..
 

Tags :

Share via

More stories

Logo